search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் தற்கொலை"

    • ஆனந்த் சுரேஷ் மன வேதனையில் இருந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி ராணி அண்ணா நகர் சந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்சுரேஷ் (21), இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.

    இந்த நிலையில் பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை ஆனந்த்சுரேஷ் காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் சமீப காலமாக ஆனந்த்சுரேசிடம் பேசாமால் ஒதுங்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் சுரேஷ் மன வேதனையில் இருந்தார்.

    இந்தநிலையில் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்ற ஆனந்த்சுரேஷ் இன்று காலை வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால்அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது.

    இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீட்சித் ரெட்டியின் பெற்றோர் நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்று இருந்தனர்.
    • தீட்சித் ரெட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் தீட்சித்ரெட்டி தனது ஆண் உறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் பகுதியான பாப்பிரெட்டி நகரை சேர்ந்தவர் தீட்சித் ரெட்டி (வயது 21). இவர் செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு டாக்டருக்கு படித்து வந்தார்.

    இந்த நிலையில் தீட்சித் ரெட்டிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். தீட்சித் ரெட்டிக்கு மனநல மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து வந்தனர்.

    தீட்சித் ரெட்டியின் பெற்றோர் நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்று இருந்தனர்.

    தீட்சித் ரெட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் தீட்சித்ரெட்டி தனது ஆண் உறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார்.

    வெளியூர் சென்றிருந்த அவரது பெற்றோர் நேற்று காலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது தீட்சித் ரெட்டி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

    இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி ஒருவரை கடந்த ஓராண்டாக ஆனந்த் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கடந்த 2 வாரமாக காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பூமியான் பேட்டை பாவாணர் நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தையல்நாயகி. இவர்களது மகன் ஆனந்த் (வயது 22). கடந்த 4 ஆண்டுக்கு முன்பு சரவணன் இறந்து விட்டார். ஆனந்த் நெல்லித்தோப்பில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் டி.எம்.எல்.டி டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அதே கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவி ஒருவரை கடந்த ஓராண்டாக ஆனந்த் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பின்னர் தினமும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த 2 வாரமாக காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆனந்திடம் அந்த மாணவி பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு வந்த ஆனந்த் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தாயார் ரெட்டி யார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து ஆனந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதலி பேசாததால் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காதல் விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் நேரடியாக வந்து ராகுலை கண்டித்தனர்.
    • சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராகுல் (வயது 24). இவர் திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளியல் படித்து வந்தார். சின்னாளப்பட்டியில் தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த அதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கும் காதல் மலர்ந்தது.

    இந்த காதல் விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் நேரடியாக வந்து ராகுலை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ராகுல் தனது அறையிலேயே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்த நபர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள அறையில் மவுலி சங்கர் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மவுலி சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மதன்குமார், மவுலி சங்கர் என 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் மதன்குமார் டி.என்.பாளையத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் மவுலி சங்கர் (18) சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மூர்த்தி அவரது மனைவி, மூத்த மகன் 3 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். கல்லூரி விடுமுறை என்பதால் மவுலிசங்கர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்நிலையில் மாலை வேலை முடிந்து மதன்குமார் வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.

    இதனை அடுத்து மதன்குமார் மாடிப்படி வழியாக ஏறி கீழே இறங்கி பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மவுலி சங்கர் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மவுலி சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே மவுலிசங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மவுலி சங்கர் எதற்காக? தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக காதலர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
    • கல்லூரி வளாகத்தில் சினேகா சவுராசியா வந்த போது அவரை அனுஜ் சிங், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த 21 வயதான சினேகா சவுராசியா என்ற மாணவி பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் அனுஜ்சிங் என்ற மாணவரும் படித்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக காதலர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டீனில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் அனுஜ் சிங் ஆத்திரம் அடைந்துள்ளார். பின்னர் கல்லூரி வளாகத்தில் சினேகா சவுராசியா வந்த போது அவரை அனுஜ் சிங், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

    நேராக விடுதிக்கு சென்ற அனுஜ் சிங் அங்கு தனது அறையில் வைத்து தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுகொண்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பல்கலை கழகத்தில் நேற்று முன்தினம் முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரு மாணவர்களும் பல்கலை கழகத்தின் சிறப்பு அனுமதியை பெற்று விடுதி அறையில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சம்பவம் தொடர்பாக கேண்டீனில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அனுஜ்சிங் , தனது காதலி சினேகாவுடன் பேசுவது போன்றும், பின்னர் அவர் ஒரு பரிசை கொடுப்பது போன்றும், அதனை சினேகா ஏற்க மறுப்பதும் இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அனுஜ் சிங் காதலியின் வயிற்றில் சுட்டதும் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். பின்னர் அனுஜ் சிங் விடுதியை நோக்கி தப்பி ஓடுவது போன்று காட்சிகள் உள்ளது.

    இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். அனுஜ் சிங்கிற்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? அவர் அதனை வளாகத்திற்குள் எப்படி கொண்டு வந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

    • பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ள கபிலன் கபடி போட்டியில் கலந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
    • பிளஸ்-2 செல்ல விருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர்.

    பாவூர்சத்திரம்:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கருமடையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சசி. இவரது மகன் கபிலன் (வயது17).

    இவர் பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் கபடி போட்டியில் கலந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். ஆனால் பிளஸ்-2 செல்ல விருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த கபிலன் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி மற்றும் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரண் பயன்படுத்தும் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
    • தற்கொலைக்கு முன்பு அவர் தனது செல்போனில் உள்ள அனைத்து பதிவுகளையும் அழித்தது ஏன்?என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், சேஷாசலாகிராமணி தெருவை சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் கரண் (வயது19). மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வந்தார். குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்ட இவர் இதற்கான பயிற்சியும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த கரண் தனது அறைக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டியும் திறக்க வில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் கரண் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கரண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கரண் பயன்படுத்தும் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆனால் அதில் இருந்து வீடியோ, புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தம் அழிக்கப்பட்டு இருந்தன. கரண் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை.

    தற்கொலைக்கு முன்பு அவர் தனது செல்போனில் உள்ள அனைத்து பதிவுகளையும் அழித்தது ஏன்?என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜெயந்தன் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • ஜெயந்தனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் லிங்ககுமார். இவருடைய வீட்டில் இவருடைய மருமகன் ஜெயந்தன் (வயது 20) தங்கியிருந்து செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெயந்தன் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயந்தனின் தாய், தந்தை இருவரும் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் மாமாவின் வீட்டில் வசித்து வந்ததாகவும், ஒரு தலை காதலால் இந்த சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர் இறப்பு குறித்து ஐஐடி சென்னை ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளது.
    • மாணவருக்கு பாடங்களை படித்து முடிப்பதில் சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் இருந்திருக்கலாம்

    சென்னை:

    சென்னை ஐஐடி-யில் பி.டெக். மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த அந்த மாணவர் அவரது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவருக்கு அவரது படிப்பில் கவனம் செலுத்துவது மற்றும் பாடங்களை படித்து முடிப்பதில் சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

    சென்னை ஐஐடியில் ஒரு மாதத்தில் இரண்டாவது மாணவர் தற்கொலை செய்துள்ளார். கடந்த மாதம் 14ம் தேதி முதுகலை மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் தறகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

    மாணவர் இறப்பு குறித்து ஐஐடி சென்னை ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளது. மேலும், ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி உள்ளது.

    • சம்பந்தப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தால் அவமானமாகி விடுமே என்று கருதிய மாணவர் தனது பாட்டி வீட்டுக்கு சென்றார்.
    • மாணவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று வீட்டின் அருகே உள்ள ஒரு பொதுக்கழிப்பிடத்துக்கு பெண் ஒருவர் சென்றார். இதை நோட்டமிட்ட அந்த மாணவர், பெண்ணுக்கு தெரியாமல் அவரை செல்போனில் வீடியோ எடுத்தார்.

    இதனை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மாணவரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் எச்சரித்து மாணவரை அனுப்பி வைத்தனர். செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து சிக்கிக் கொண்டதால் மாணவர் வேதனை அடைந்தார்.

    சம்பந்தப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தால் அவமானமாகி விடுமே என்று கருதிய அவர் அந்த பகுதியில் தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • மாணவர் எழுதிய குறிப்பு எதுவும் கிடைக்காததால், விபத்து மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்கு
    • படிப்பு தொடர்பான அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலம் என சந்தேகிக்கின்றனர்.

    மும்பை:

    மும்பை பவாய் பகுதியில் உள்ள ஐஐடி-யில் பி.டெக். முதலாமாண்டு படித்து வந்த அகமதாபாத் மாணவர் தர்சன் சோலங்கி நேற்று மாலை திடீரென விடுதியின் 7வது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை என்று உறுதி செய்யும் வகையில் மாணவர் எழுதிய குறிப்பு எதுவும் கிடைக்காததால், விபத்து மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெறுகிறது. படிப்பு தொடர்பான அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலம் என சந்தேகிக்கின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு எதிராக சாதி பாகுபாடு காட்டப்பட்டதாகவும், அதனால் மாணவர் தற்கொலை செய்திருப்பதாகவும், மாணவர் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. இந்த கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்த அந்த மாணவரின் முதல் செமஸ்டர் தேர்வு சனிக்கிழமை முடிந்த நிலையில் அவர் இறந்திருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ×